இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை பத்தாயிரத்து முந்நூற்றைத் தாண்டியுள்ளது. கொரோனா வைரசால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 339 ஆக உயர்ந்துள்ளது.
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக ஆயிரத்து 211 பேருக்குக் கொரோனா பாதிப்பு உள்ளது கண்டறியப்பட்டுள்ளது. இவர்களுடன் சேர்த்துக் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை பத்தாயிரத்து 363 ஆக உயர்ந்துள்ளது.
இவர்களில் ஆயிரத்து 35 பேர் முழுமையாகக் குணமடைந்துள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றால் 31 பேர் பலியானதால், உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 339 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்பும் உயிரிழப்பும் மகாராஷ்டிர மாநிலத்திலேயே அதிக அளவு உள்ளது. அங்கு இரண்டாயிரத்து 334 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில் 160 பேர் உயிரிழந்தனர்.
டெல்லியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை ஆயிரத்து 510 ஆக உயர்ந்துள்ளளது. இருபது பேர் உயிரிழந்தனர்.
தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை ஆயிரத்து 173ஆக உள்ளது. சிகிச்சை பயனின்றி 11 பேர் உயிரிழந்தனர். ராஜஸ்தானில் கொரோனா வைரஸ் பாதித்தோர் எண்ணிக்கை 873 ஆக உள்ளது.
3 பேர் உயிரிழந்தனர். மத்தியப் பிரதேசத்தில் 604 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில், 43 பேர் உயிரிழந்தனர். தெலங்கானாவில் 562 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில், 16 பேர் உயிரிழந்தனர். உத்தரப்பிரதேசத்தில் 558 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில் 5 பேர் உயிரிழந்தனர்.
குஜராத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 539 ஆக உள்ளது. 26 பேர் சிகிச்சை பயனின்றி உயிரிழந்தனர். ஆந்திர மாநிலத்தில் 432 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில் 7பேர் உயிரிழந்தனர். கேரளத்தில் 379 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில், அவர்களில் 198 பேர் முழுமையாகக் குணமடைந்துள்ளனர். 3 பேர் உயிரிழந்தனர்.