பொருளாதார வீழ்ச்சியைத் தடுக்கத் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் தெரிவித்துள்ளார்.
நாட்டின் பணக்கொள்கையை உருவாக்கும் குழுவில் ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் உட்பட 6 உறுப்பினர்கள் உள்ளனர். இவர்கள் மும்பையில் கூடிப் பொருளாதாரச் சீரமைப்புக்கு எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்துப் பேசியுள்ளனர்.
அந்தக் கூட்டத்தில் கடனுக்கான வட்டி விகிதத்தை முக்கால் விழுக்காடு குறைக்க ஆறில் நான்குபேர் வாக்களித்ததாக ரிசர்வ் வங்கி அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. கொரோனாவால் பொருளாதாரத்தில் ஏற்பட்ட பாதிப்பைச் சீரமைக்க எத்தகைய நடவடிக்கையையும் எடுக்க ரிசர்வ் வங்கி தயங்காது என சக்திகாந்த தாஸ் பேசியுள்ளார். இதேபோல நாட்டின் பண வீக்கத்தைக் குறைக்கவும் விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.