இந்தியாவில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 9 ஆயிரத்தை கடந்து அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவுக்கு 35 பேர் உயிரிழந்ததை அடுத்து பலி எண்ணிக்கை 308 ஆக உயர்ந்துள்ளது.
மத்திய சுகாதாரத்துறை அமைச்சக புள்ளிவிவரங்களின்படி, இந்தியாவில் மொத்தம் 9 ஆயிரத்து 152 பேருக்கு கொரோனா உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதில் 857 பேர் குணமடைந்துள்ளதை அடுத்து, 7 ஆயிரத்து 987 பேர் தொடர்ந்து சிகிச்சையில் உள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் புதிதாக 620 பேருக்கு கொரோனா உறுதிசெய்யப்பட்டுள்ளது. 35 பேர் உயிரிழந்துள்ளனர்.
மகாராஷ்டிரா உட்பட 3 மாநிலங்களில் கொரோனா பாதிப்பு ஆயிரம் என்ற எண்ணிக்கையை கடந்துள்ளது. தொடர்ந்து முதலிடத்தில் உள்ள மகாராஷ்டிரத்தில் 1985 பேருக்கு கொரோனா உறுதிசெய்யப்பட்டு 217 பேர் குணமடைந்துள்ளனர். 149 பேர் உயிரிழந்துள்ளனர்.
இரண்டாவது இடத்தில் டெல்லி உள்ளது. அங்கு 1154 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு 27 பேர் குணமடைந்துள்ளனர். 24 பேர் பலியாகியுள்ளனர்.
மூன்றாவது இடத்தில் உள்ள தமிழகத்தில் ஆயிரத்து 75 பேருக்கு கொரோனா உறுதிசெய்யப்பட்டு 50 பேர் குணமடைந்துள்ளனர். 11 பேர் உயிரிழந்துள்ளனர்.
ராஜஸ்தானில் 804 பேருக்கு கொரோனா உறுதிசெய்யப்பட்டு, 21 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை மூவர் உயிரிழந்துள்ளனர்.
மத்தியப் பிரதேசத்தில் 564 பேருக்கு கொரோனா உறுதிசெய்யப்பட்டு, 36 பேர் உயிரிழந்துள்ளனர்.
குஜராத்தில் 516 பேருக்கு கொரோனா உறுதிசெய்யப்பட்டு, 44 பேர் குணமடைந்துள்ளனர். 25 பேர் உயிரிழந்துள்ளனர்.
தெலுங்கானாவில் 504 பேருக்கு கொரோனா உறுதிசெய்யப்பட்டு, 43 பேர் குணமாகியுள்ளனர். 9 பேர் பலியாகியுள்ளனர்.
உத்தரப்பிரதேசத்தில் 483 பேருக்கு கொரோனா உறுதிசெய்யப்பட்டு 46 பேர் குணமடைந்துள்ளனர். 5 பேர் உயிரிழந்துள்ளனர்.
ஆந்திரப்பிரதேசத்தில் 427 பேருக்கு கொரோனா உறுதிசெய்யப்பட்டு, 11 பேர் குணமடைந்துள்ளனர். 7 பேர் உயிரிழந்துள்ளனர்.
கேரளத்தில் 376 பேருக்கு கொரோனா உறுதிசெய்யப்பட்டு, இந்தியாவிலேயே அதிகபட்சமாக 179 பேர் குணமடைந்துள்ளனர். இருவர் உயிரிழந்துள்ளனர்.
மேலும் தகவல் அறிய : https://news.google.com/covid19/map?hl=en-IN&gl=IN&ceid=IN:en