ஊரடங்கு தளர்த்தப்பட்ட பின்னர் விமான சேவைகள் தொடங்கினாலும் விமானக் கட்டணம் மும்முடங்கு அதிகமாக இருக்கும் என்று தகவல் வெளியாகியுள்ளது.
தனிநபர் இடைவெளியை கடைபிடிக்கும் வகையில், விமானத்தில் மிகக்குறைந்த இருக்கைகளுக்கே முன்பதிவு செய்யப்படும். மூன்று பேர் அமரக்கூடிய இருக்கையில் இனி ஒருவர் மட்டும் அமர வைக்கப்படுவார்.
வரிசைக்கு 6 பேர் என 30 வரிசை கொண்ட விமானத்தில் 180 பயணிகள் அனுமதிக்கப்படுவது வழக்கம். ஆனால் இனி 60 பேரை மட்டுமே அனுமதிக்க விமான நிறுவனங்கள் திட்டமிட்டுள்ளன. இதனால் ஏற்படும் நஷ்டத்தை ஈடுகட்ட மூன்று மடங்கு வரை கட்டணம் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.