உஜ்வாலா திட்டத்தின்கீழ் ஏப்ரல் மாதத்தில் இதுவரை 85 லட்சம் சமையல் எரிவாயு உருளைகள் வழங்கப்பட்டுள்ளதாக அரசு தெரிவித்துள்ளது.
ஏழை எளிய மக்களுக்கான உஜ்வாலா திட்டத்தில் ஏப்ரல், மே, ஜூன் மாதங்களில் 3 சமையல் எரிவாயு உருளைகள் இலவசமாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. அதற்கான தொகையாக முதற்கட்டமாக 7 கோடியே 15 லட்சம் பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் மொத்தம் ஐயாயிரத்து 606 கோடி ரூபாய் செலுத்தப்பட்டுள்ளது.
உஜ்வாலா திட்டப் பயனாளிகள் ஏப்ரலில் இதுவரை ஒரு கோடியே 26 லட்சம் உருளைகள் கேட்டுள்ளதாகவும், இவற்றில் 85 லட்சம் உருளைகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் பெட்ரோலிய அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ஒட்டுமொத்தமாக 27 கோடியே 87 லட்சம் சமையல் எரிவாயு வாடிக்கையாளர்கள் உள்ளதாகவும், நாள்தோறும் 50 லட்சம் முதல் 60 லட்சம் வரையிலான எரிவாயு உருளைகள் வழங்கப்பட்டு வருவதாகவும் பெட்ரோலிய அமைச்சகம் தெரிவித்துள்ளது.