இந்தியாவில் கொரோனா சமூக தொற்றாக மாறியதற்கு இதுவரை ஆதாரமில்லை என்று மத்திய அரசு மீண்டும் தெரிவித்துள்ளது.
டெல்லியில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய மத்திய சுகாதார அமைச்சக இணை செயலாளர் லாவ் அகர்வாலிடம் (Lav Agarwal, joint secretary in the health ministry) இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் நடத்திய ஆய்வு முடிவுகள், கொரோனா பாதிப்பு நபர்களில் 40 சதவீதம் பேர் பயணம் மேற்கொண்டவர்கள் இல்லை, பயண பின்னணி கொண்டவர்கள் இல்லை என்று தெரிவிப்பது குறித்து கேட்கப்பட்டது.
இதற்கு அவர், அந்த ஆய்வை வைத்து மட்டும் கொரோனா சமூக தொற்றாக மாறிவிட்டது என்ற முடிவுக்கு வர முடியாது என்றும், அந்த ஆய்வுகள், கொரோனா பாதித்தோர் வாழும் பகுதிகளில் நடத்தப்பட்டது என்றும் குறிப்பிட்டார்.