ஊரடங்கு உத்தரவு சமயத்தில் ஆதரவற்று சாலையில் திரியும் மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்காக எடுக்கப்பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து, பதிலளிக்குமாறு மத்திய அரசுக்கு தேசிய மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கான உறைவிடம், உணவு மற்றும் மருத்துவ சிகிச்சைக்காக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து 2 வரங்களில் தெரிவிக்குமாறு குறிப்பிடப்பட்டு உள்ளது.
மேலும், அடிப்படை வசதிகளுடன் கொரோனா முன்னெச்சரிக்கையாக அவர்களது பாதுகாப்பை உறுதி செய்யும்படி, மாநில அரசுகளுக்கு மத்திய அரசு வலியுறுத்த வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.