காய்ச்சலுக்கான 30 லட்சம் பாராசிட்டமால் மருந்துகள் அடங்கிய தொகுப்பு இந்தியாவிலிருந்து இங்கிலாந்துக்கு நாளை சென்றடைகிறது.
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வரும் நிலையில் மருந்துகளுக்கான ஏற்றுமதியை இந்திய அரசு நீக்கியுள்ளது. மேலும் அமெரிக்கா, பிரேசில், இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகள் கொரோனாவுக்கான மருந்தை வழங்கும்படி இந்தியாவிடம் மன்றாடி வருகின்றன.
இந்த நிலையில் மருந்து ஏற்றுமதிக்கான தடையை நீக்கிய 48 மணி நேரத்திற்குள் 30 லட்சம் பாராசிட்டமால் வகை மருந்துகளை இங்கிலாந்துக்கு, இந்தியா அனுப்ப உள்ளது.
இந்தத் தொகுப்பு நாளை இங்கிலாந்து சென்றடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவின் இந்த உதவி இருநாடுகளுக்கும் இடையே அதிக நெருக்கத்தை உண்டாக்கி விட்டதாக இங்கிலாந்து அமைச்சர் தாரிக் அஹ்மத் தெரிவித்துள்ளார்.