கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளின் கோரிக்கையை ஏற்று, மருந்து மாத்திரைகளை இந்தியா அதிகளவில் ஏற்றுமதி செய்து வருகிறது.
மலேரியாவுக்கு இந்தியாவில் வழங்கப்படும் ஹைட்ரோக்சிகுளோரிக்குயின் எனப்படும் மருந்துதான் இப்போது உலகம் முழுவதும் கொரோனாவுக்கான மருந்தாகப் பயன்படுத்தப்படுகிறது.
உலகின் 85 சதவீத தேவையை இந்தியாதான் பூர்த்தி செய்து வருகிறது. உலக நாடுகளின் கோரிக்கையை ஏற்று இந்த மாத்திரைகளை இந்திய அரசு ஏற்றுமதிக்கு அனுமதியளித்துள்ளது.
அமெரிக்கா, பிரேசில், ஸ்பெயின், ஜெர்மனி,பஹ்ரைன், நேபாளம்,பூட்டான், ஆப்கானிஸ்தான், மாலத்தீவுகள், வங்காளதேசம் , செசல்ஸ் ,மொரீஷியஸ், டொமினிக்கன் குடியரசு உள்ளிட்ட 13 நாடுகளுக்கு 14 மில்லியன் HSQ பாராசிட்டமால் உள்ளிட்ட மாத்திரைகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.