முகம் மற்றும் அறுவை சிகிச்சை முகமூடிகள், வென்டிலேட்டர்கள், சோதனைக் கருவிகள் மற்றும் தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்கள் ஆகியவற்றை இறக்குமதி செய்வதற்கான அடிப்படை சுங்க வரி மற்றும் சுகாதார தீர்வை ஆகியவற்றில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்த மத்திய நிதி அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் இந்த விலக்கு உடனடியாக அமலுக்கு வருவதாகவும், செப்டம்பர் மாதம் 30ந் தேதி வரை அமலில் இருக்கும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்தவும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகவும் மருத்துவ உபகரணங்களை வாங்குவதில் மத்திய-மாநில அரசுகள் தீவிரம் காட்டி வருகின்றன.