ஊரடங்கு தளர்த்தப்பட்ட பின்னர் ரயில்வே போக்குவரத்து தொடங்கும்போது, மூன்று பகுதிகளாக வகுத்து ரயில் போக்குவரத்தை அமைக்க அதிகாரிகள் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
அதன்படி சிவப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்ட பகுதியில் போக்குவரத்துக்கு அனுமதி கிடைக்காது. கொரோனா பாதிப்பு குறைவாக உள்ள பகுதிகள் மஞ்சள் மண்டலமாக அறிவிக்கப்பட்டு குறைந்த அளவு போக்குவரத்து தொடங்கும்.
பச்சை மண்டலமாக அறிவிக்கப்படும் பகுதியில் முழு அளவில் போக்குவரத்து செயல்படும்.ரயில் நிலையங்களில் பயணிகளை சோதிப்பது ,முகக்கவசத்தை கட்டாயமாக்குவது ரயில்களில் குறைந்த பயணிகளை மட்டும் அனுமதிப்பது என்று பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகள் பரிசீலிக்கப்படுகின்றன.