மார்ச் 28ஆம் தேதி முதல் எட்டரை லட்சம் உணவுப் பொட்டலங்கள் தேவையானவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக ரயில்வே துறை தெரிவித்துள்ளது.
ஊரடங்கால் பாதிக்கப்பட்ட ஏழை எளியோருக்கும் தொழிலாளர்களுக்கும் ரயில்வேதுறை, ஐஆர்சிடிசி ஆகியவை மூலம் உணவுப் பொட்டலங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. ஐஆர்சிடிசியின் சமையல் கூடங்களில் மட்டும் 5 லட்சம் பொட்டலங்கள் தயாரிக்கப்பட்டதாகத் தெரிவித்துள்ளது.
ரயில்வே பாதுகாப்புப் படையினர் 2 லட்சம் உணவுப் பொட்டலங்களும், தொண்டு நிறுவனங்கள் சார்பில் ஒன்றரை லட்சம் உணவுப் பொட்டலங்களும் வழங்கப்பட்டதாகத் தெரிவித்துள்ளது. இவற்றில் 6 லட்சம் உணவுப் பொட்டலங்களை ரயில்வே பாதுகாப்புப் படையினர் கொண்டுசென்று வழங்கியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மீதியை ரயில்வேயின் பல்வேறு துறையினரும் தொண்டு நிறுவனங்களும் வழங்கியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.