ஏப்ரல் 14 ஆம் தேதிக்குப் பிறகு பயணியர் ரயில்கள் இயக்கப்படும் என்று வெளியான செய்திகள் வெறும் வதந்தி என்று ரயில்வே அமைச்சகம் மறுத்துள்ளது.
ஊரடங்கு முடிந்த உடன் பயணியர் ரயில்கள் இயக்கப்படும் என்றும் பயணிகள் 4 மணி நேரத்திற்கு முன்னதாகவே ரயில் நிலையங்களுக்கு வர வேண்டும், அவர்களுக்கு தெர்மல் ஸ்கேனிங் உள்ளிட்ட சோதனைகள் நடத்தப்படும் என்று சில பத்திரிகைகளில் வெளியான செய்தியை ரயில்வே அமைச்சகம் மறுத்துள்ளது.
பயணியருக்கான ரயில் சேவைகளை எப்போது துவக்குவது என்பது பற்றி இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை என்று அறிக்கை ஒன்றில் ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ஊரடங்கின் தொடர்ச்சியாக கடந்த 24 முதல் பாசஞ்சர், மெயில், எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட அனைத்து விதமான பயணியர் ரயில் சேவையும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.