சத்தீஸ்கர் மாநிலத்தில் பாஜக எம்.எல்.ஏ கொலை வழக்கில் தொடர்புடைய 2 பேரை தேசிய புலனாய்வு அமைப்பினர் கைது செய்துள்ளனர்.
கடந்த ஆண்டு ஏப்ரல் 9ம் தேதி தண்டேவாடா தொகுதி எம்எல்ஏ பீமா மண்டவி, குவாகொண்டா அருகே உள்ள ஷியாம்கிரி கிராமத்தில் வாகனத்தில் சென்றுகொண்டிருந்த போது, சாலையில் புதைக்கட்டிருந்த வெடிகுண்டு வெடித்து சிதறியது.
அதில் பீமா மாண்டவி மற்றும் அவருடன் பாதுகாப்புக்காக சென்ற 4 போலீசார் உயிரிழந்தனர். இதுதொடர்பான வழக்கை விசாரித்து வந்த தேசிய புலனாய்வு அமைப்பு, தாக்குதலில் தொடர்புடைய இருவரை கைது செய்துள்ளது.
ஜக்தால்பூரில் உள்ள என்ஐஏ சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட இருவரையும், பின்னர் 6 நாட்கள் காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர்.
இருவரும் நக்சல்களுக்கு ஆதரவாக செயல்பட்டதுடன், அவர்கள் தங்குவதற்கு இடம் கொடுத்ததும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.