மத்தியப் பிரதேசத்தில் இந்திய காவல்பணி அதிகாரிகள் இருவருக்குக் கொரோனா வைரஸ் உள்ளது சோதனையில் தெரியவந்துள்ளது.
மத்தியப் பிரதேசத் தலைநகர் போபாலில் பணியாற்றும் இந்தியக் காவல்பணி அதிகாரி ஒருவருக்கும், இந்தூரில் பணியாற்றும் இந்தியக் காவல்பணி அதிகாரி ஒருவருக்கும் கொரோனா வைரஸ் தொற்றியிருப்பது ஆய்வில் தெரியவந்துள்ளது.
இதையடுத்து இருவருக்கும் தனிமை வார்டுகளில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக நலவாழ்வுத்துறை அலுவலர் ஒருவர் தெரிவித்துள்ளார். போபால், இந்தூர், உஜ்ஜைன் மாவட்டங்களில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்துள்ள நிலையில், 3 மாவட்டங்களையும் வெளிமாவட்டத் தொடர்பு இல்லாமல் தடை செய்யும்படி மாநில முதலமைச்சர் சிவராஜ்சிங் சவுகான் உத்தரவிட்டுள்ளார்.