இந்தியாவில் கொரோனா தொற்று நோய்க்கு பலியானோரின் எண்ணிக்கை 166ஆகவும், பாதித்தோரின் எண்ணிக்கை 5 ஆயிரத்து 734ஆகவும் அதிகரித்துள்ளது.
நாடு முழுவதும் கொரோனாவுக்கு கடந்த 24 மணி நேரத்தில் 17 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் கொரோனாவுக்கு பலியானோரின் எண்ணிக்கை 166ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவுக்கு இதுவரை அதிகபட்சமாக மகாராஷ்டிரா மாநிலத்தில் 72 பேர் உயிரிழந்துள்ளனர். அதற்கடுத்து அதிகபட்சமாக குஜராத்தில் 16 பேரும், மத்திய பிரதேசத்தில் 13 பேரும் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர்.
இதேபோல் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் மேலும் 540 பேர் பாதிக்கப்பட்டிருப்பது மருத்துவ பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.இவர்களையும் சேர்த்து நாட்டில் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 5 ஆயிரத்து 734ஆக அதிகரித்துள்ளது. இவர்களில் 71 பேர் வெளிநாட்டினர் ஆவர்.
கொரோனா அதிகம் பாதித்த மாநிலங்களின் பட்டியலில் மகாராஷ்டிரா முதலிடத்தில் உள்ளது. அந்த மாநிலத்தில் இதுவரை ஆயிரத்து 135 பேருக்கு கொரோனா இருப்பது மருத்துவ பரிசோதனையில் உறுதியாகியுள்ளது.
நாடு முழுவதும் இதுவரை மருத்துவ சிகிச்சைக்கு பின்னர் கொரோனாவில் இருந்து 473 பேர் குணமடைந்துள்ளனர். அவர்களில் அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 117 பேர் குணமாகியுள்ளனர். இதற்கடுத்து கேரளாவில் 83 பேரும், தெலங்கானாவில் 35 பேரும் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனர்.