ஜம்மு காஷ்மீரில் எல்லை தாண்டிய பாகிஸ்தான் தீவிரவாதிகளுடன் நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் ஜெய்ஷே முகமது இயக்கத்தின் முக்கிய தளபதி சுட்டுக் கொல்லப்பட்டான்.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய பாதுகாப்பு படை அதிகாரிகள், குலாபாத் பகுதியில் சில தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக தகவல் கிடைத்ததையடுத்து அந்தப் பகுதியை பாதுகாப்பு படையினர் முற்றுகையிட்டதாக தெரிவித்தனர்.
போலீசார், மத்திய ரிசர்வ் படையினர் கூட்டாக நடத்திய இந்த வேட்டையில் சஜத் தார் என்ற தீவிரவாதி சுட்டுக் கொல்லப்பட்டான். ஏகே 47 துப்பாக்கி வெடிகுண்டுகள் உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த சண்டையில் மேலும் 4 தீவிரவாதிகள் சுற்றி வளைக்கப்பட்டனர்.