டெல்லியில் மளிகைப் பொருட்கள் வாங்க மார்க்கெட்டுக்கு சென்ற 2 டாக்டர்கள் தாக்கப்பட்டனர்.
தெற்கு டெல்லியில் சஃப்தர்ஜங் அரசு மருத்துவமனையில் பணியாற்றும் 2 மருத்துவர்கள் கௌதம் நகர் மார்க்கெட்டிற்கு பொருட்கள் வாங்கச் சென்றுள்ளனர். டாக்டர்கள் வெளியே வருவது கொரோனா பரவுவதற்கு வழிவகுத்துவிடும் என்பதால், வீட்டுக்குள்ளேயே இருக்க வேண்டும் என அங்கு ஒரு நபர் வம்பு இழுத்துள்ளார்.
அந்த நபருக்கு உள்ளூர் ஆட்கள் சிலரும் ஆதரவாக திரண்ட நிலையில், எதிர்ப்பு தெரிவித்த 2 மருத்துவர்களும் தாக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டார். தாக்கப்பட்ட 2 மருத்துவர்களுக்கும் சஃப்தர்ஜங் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது.