அக்டோபர் மாதம் வரை ஓட்டல்கள், உணவகங்கள் மூடப்படும் என்று பரவும் வதந்திகளுக்கு மத்திய அரசு மறுப்பு வெளியிட்டுள்ளது.
அத்தியாவசிய சேவைகளில் ஒன்றான உணவகங்களும் ஏப்ரல் 14 வரையிலான ஊரடங்கு காலத்தில் மூடப்பட்டுள்ளன. சில ஓட்டல்களில் பார்சல் மட்டும் வழங்கப்படுகிறது.
ஊரடங்கு மேலும் நீட்டிக்கப்படலாம் என்று பிரதமர் மோடி சுட்டிக்காட்டியுள்ள நிலையில் அக்டோபர் மாதம் வரை உணவகங்களையும் தங்கும் விடுதிகளையும் திறக்கக்கூடாது என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக தவறான வதந்திகள் பரவியுள்ளன.
இது குறித்து விளக்கம் அளித்துள்ள மத்திய அரசு, இது முற்றிலும் தவறான தகவல் என்று தெரிவித்துள்ளது.உணவகங்கள் தொழில் ஏற்கனவே இந்த ஆண்டு தொடங்கி கொரோனா பீதியால் 9 பில்லியன் டாலர் அளவுக்கு இழப்பை சந்தித்துள்ளது.
ஓட்டல்களில் பணிபுரியும் 15 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பணிகளை இழக்கக்கூடிய நிலையும் நீடிக்கிறது.