கடந்த மார்ச் மாதம் 15ம் தேதி காணொலி மூலமாக சார்க் நாடுகளின் தலைவர்களுடனும் பிரதமர் மோடி காணொலி மூலமாக ஆலோசனை நடத்தினார்.
இதனைத் தொடர்ந்து பாகிஸ்தான் தவிர மற்ற அனைத்து சார்க் நாடுகளின் வர்த்தக துறை அதிகாரிகளின் மாநாடு நேற்று நடைபெற்றது. விமானப் போக்குவரத்து கட்டுப்பாடுகளைத் தளர்த்துவது, கொரோனாவை ஒன்றுபட்டு எதிர்ப்பது, மண்டல வர்த்தகத் தடைகளை நீக்குவது உள்ளிட்ட முக்கியப் பிரச்சினைகள் இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்டன.
கொரோனாவால் 8 நாடுகளில் ஏற்படக் கூடிய பொருளாதார வர்த்தக பாதிப்புகள் குறித்தும் விரிவாக விவாதிக்கப்பட்டது. ஏற்றுமதி இறக்குமதிக்கு குறைந்த அளவிலான ஆவணங்களை ஏற்பது, வங்கிகள் வழியாக நிலுவைத் தொகையை செலுத்துவது, சுங்கத்துறை தொடர்பான பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பது உள்ளிட்ட பிரச்சினைகளும் இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்டன. பாகிஸ்தான் தவிர இதில் பங்கேற்ற ஏழு நாடுகளும் விரிவான ஆலோசனைகளை வழங்கியுள்ளதாக வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.