நிலுவையில் இருக்கும் ஐந்து லட்சம் ரூபாய் வரையிலான வருமான வரி ரிபண்டுகளை உடனடியாக விடுவிக்க வருமான வரித்துறை முடிவு செய்துள்ளது.
கொரானா காலகட்டத்தில் ஏற்படும் நெருக்கடிகளை சமாளிக்க இது உதவும் என வருமான வரித்துறை வட்டாரங்கள் தெரிவித்தன. இதனால் வரிசெலுத்தும் சுமார் 14 லட்சம் பேர் பயன் அடைவார்கள்.
அதே போன்று சிறு குறு நடுத்தர தொழில்துறையினர் உள்ளிட்ட சுமார் ஒரு லட்சம் பேரின் ஜிஎஸ்டி மற்றும் சுங்கவரி ரிபண்டுகளும் உடனடியாக வழங்கப்படும் என வருமான வரித்துறை தெரிவித்துள்ளது. இவர்களுக்கு சுமார் 18 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு ரிபண்ட் கிடைக்கும்.