கொரோனாவை முன்னிட்டு ஊடகங்களுக்கு அரசு மற்றும் பொதுத்துறை விளம்பரங்களை 2 ஆண்டுகளுக்கு அளிக்க வேண்டாம் என்ற காங்கிரஸ் தலைவர் சோனியாவின் கருத்து மிகுந்த வேதனை அளிப்பதாக NBA எனப்படும் தேசிய செய்தி ஒலிபரப்பாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
கொரோனா தடுப்பு தொடர்பாக பல ஆலோசனைகளை பிரதமர் மோடிக்கு தெரிவித்த சோனியா காந்தி இந்த கருத்தையும் வெளியிட்டிருந்தார். ஏற்கனவே பொருளாதார வீழ்ச்சியால் தொலைக்காட்சி ஊடகங்களின் விளம்பர வருவாய் குறைந்த நிலையில், ஊரடங்கால் அது மேலும் பாதிப்படைந்துள்ளது.
இந்த நிலையில் தொலைக்காட்சி செய்திப்பிரிவினர் உயிரையும் பொருட்படுத்தாமல் மக்களுக்கு தகவல்களை அளித்து வருகின்றனர். இதனிடையே காங்கிரஸ் தலைவர் இது போன்ற ஆலோசனைகளை வெளியிடுவது செய்தி தொலைக்காட்சி ஊழியர்களை சோர்வடைய செய்து விடும் என NBA தலைவர் ரஜத் சர்மா அறிக்கை ஒன்றில் கவலை தெரிவித்துள்ளார்.