இந்த ஆண்டின் மிகப்பெரிய இளஞ்சிவப்பு முழு நிலா கூடுதலான பிரகாசத்துடன் நேற்றிரவு காட்சியளித்தது. பிங்க் சூப்பர்மூன் என்று இது அழைக்கப்படுகிறது.
வானில் அரிய நிகழ்வாக இதனை ஆய்வாளர்கள் கூறுகின்றனர். பூமிக்கு பூஜ்யம் புள்ளி 1 சதவீதம் நெருங்கி வருவதால் இவ்வாறு பெரிதாகவும் இளஞ்சிவப்பாகவும் தெரிவதாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
பார்ப்பதற்கு சராசரி நிலாவை விட ஏழு சதவீதம் அதிகமாக இது காட்சியளித்தது.அதன் மீது ஒரு இளஞ்சிவப்பு மேகம் மூடுவதால் அந்த நிறம் ஏற்படுவதாகவும் கூறப்படுகிறது.இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் மக்கள் மொட்டை மாடிகளில் நின்று இளஞ்சிவப்பு முழு நிலவை ரசித்தனர்.
தலைநகர் டெல்லியின் இந்தியா கேட் அருகே இது அற்புதமான காட்சியாக இருந்தது.இதே போன்று பஞ்சாப் மாநிலம் லுதியானாவிலும் அது கண்ணுக்கு விருந்தாக இருந்தது.ஆசியாவின் பல்வேறு நாடுகளிலும் துருக்கியிலும் சூப்பர் முழு நிலவு ஒளிர்ந்தது. மாஸ்கோவின் நகரத்தின் மீதும் இது ஒளி வீசியது.