வரும் 14 ஆம் தேதிக்குப் பிறகு ஊரடங்கை நீட்டிக்க வேண்டும என்று பல மாநிலங்கள் கோரிக்கை விடுத்துள்ள நிலையில் அது குறித்து பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இல்லத்தில் உயர்மட்ட ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
அதில் மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, நிர்மலா சீத்தாராமன்,பியூஷ் கோயல், ராம் விலாஸ் பாஸ்வான் உள்ளிட்ட அமைச்சர்கள் ஆலோசனை நடத்தினர். இந்த கூட்டத்தில் உயிர் பெரியதா, வாழ்வாதாரம் பெரியதா என விவாதம் நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.
எனினும் ஊரடங்கு குறித்து நாடாளுமன்ற கட்சித் தலைவர்கள் மற்றும் முதலமைச்சர்களுடன் விவாதித்த பின்னர் பிரதமர் மோடி நல்ல முடிவை அறிவிப்பார் என மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.