நாட்டில் இதுவரை ஒரு லட்சத்து ஏழாயிரம் கொரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளதாக மருத்துவ ஆராய்ச்சிக் குழு தெரிவித்துள்ளது.
டெல்லியில் இந்திய மருத்துவ ஆராய்ச்சிக்குழுவைச் சேர்ந்த கங்கா கேட்கர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது நாட்டின் பல்வேறு நகரங்களில் மொத்தம் 136 அரசு ஆய்வகங்களில் கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தெரிவித்தார். 59 தனியார் ஆய்வகங்களில் கொரோனா பரிசோதனை செய்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
இவையனைத்திலும் இதுவரை ஒரு லட்சத்து ஏழாயிரம் சோதனைகள் செய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார். ஊரடங்கு விதிகளையும், சமூக விலகலையும் கடைப்பிடிக்காத கொரோனா நோயாளி ஒருவர் ஒரு மாதத்தில் 406 பேருக்குக் கொரோனாவைப் பரப்புவதாக மருத்துவ ஆராய்ச்சிக் குழு ஆய்வில் தெரியவந்துள்ளது.