மாநிலங்களுக்கு இந்த வாரத்தில் 5 லட்சம் ராபிட் ஆன்டி பாடி டெஸ்ட் கிட் எனப்படும் அதிவிரைவு கொரோனா பரிசோதனைக் கருவிகள் வழங்கப்படும் என இந்திய மருத்துவ ஆய்வுக் கவுன்சில் தெரிவித்துள்ளது.
இவை நாளை மறுநாளுக்குள் தங்களுக்கு கிடைக்கும் என்றும் அதிக பாதிப்பு அடிப்படையில் தேவைக்கேற்ப மாநிலங்களுக்கு வழங்கப்படும் என்றும் அதன் தொற்று நோய்ப் பிரிவுத் தலைவர் ராமன் ஆர் கங்காகேத்கர் (Raman R Gangakhedkar) தெரிவித்துள்ளார்.
இதனிடையே நாசி மற்றும் தொண்டையில் இருந்து மாதிரிகளை எடுத்து ஆர்.டி. - பி.சி.ஆர். எனப்படும் ஆய்வக முறைப்படி மேற்கொள்ளப்படும் சோதனை முடிவுகள் கிடைக்க 12 மணி முதல் 24 மணி நேரம் ஆகும்.
ஆனால் அதிவிரைவுச் சோதனையில் கிருமி பாதிக்கப்பட்டவரின் ரத்தத்தில் இயற்கையாகவே உருவாகும் ஆன்டிபாடீஸ் எனப்படும் நோய் எதிர்ப்புத் தன்மையை 45 நிமிடங்கள் முதல் 2 மணி நேரத்தில் அடையாளம் கண்டு தெரிவித்துவிட முடியும்.
ஆனால் கிருமி பாதிக்கப்பட்ட 7 முதல் 10 நாட்களுக்குப் பிறகே ரத்தத்தில் ஆண்டிபாடிகளை துல்லியமாக அடையாளம் காண முடியும் என்பதால் அதிவிரைவுச் சோதனையில் துல்லியமான முடிவுகளுக்கு வாய்ப்பில்லை என்று கூறப்படுகிறது