தேசிய அளவிலான ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட வேண்டும் என தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர் ராவ் விருப்பம் தெரிவித்துள்ளார்.
கொரோனா பரவலைத் தடுக்க நாடு முழுவதும் 21 நாள் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் தெலங்கானாவில் ஜூன் 2-ந்தேதி வரை தெலுங்கானா மாநிலத்தில் ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்படும் என தகவல்கள் வெளியாகின.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அம்மாநில முதலமைச்சர் சந்திரசேகர் ராவ், ஏப்ரல் 15-ந்தேதிக்குப் பிறகு மேலும் இரண்டு வாரங்கள் தேசிய அளவிலான ஊரடங்கு உத்தரவை நீட்டிக்க பரிந்துரை செய்ததாக குறிப்பிட்டுள்ளார்.
மேலும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள பொருளாதாரத்தை மீட்டெடுக்க முடியும் என்று குறிப்பிட்டுள்ள அவர், மக்கள் உயிரை மீட்க முடியாது என்று அறிக்கையில் தெரிவித்துள்ளார். கொரோனாவுக்கு எதிரான ஒரே ஆயுதம் ஊரடங்குதான் என்றும் அவர் திட்டவட்டமாகக் குறிப்பிட்டார்.