ஏப்ரல் 15 முதல் உள்நாட்டு விமானங்களில் பயணிப்பதற்கான முன்பதிவு தொடங்கும் என கோஏர் விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.
கொரோனா தொற்று காரணமாக அனைத்து விமான சேவைகளையும் மத்திய அரசு ரத்து செய்துள்ளது. வரும் 14ம் தேதி ஊரடங்கு முடிவுக்கு வரும் நிலையில், கோஏர் நிறுவனம் விடுத்துள்ள அறிக்கையில், வரும் 15ம் தேதி முதல் குறைந்த கட்டணத்திற்குரிய உள்நாட்டு விமானங்களுக்கான முன்பதிவு தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் சர்வதேச விமானங்களுக்கான முன்பதிவு மே மாதம் முதல் தேதியிலிருந்து தொடங்கும் என்றும் கோஏர் நிறுவனம் கூறியுள்ளது. முன்னதாக ஏர் இந்தியா நிறுவனம் ஏப்ரல் 30 வரையிலான அனைத்து முன்பதிவுகளையும் ரத்து செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.