கொரோனா தொற்றை தடுக்கும் நடவடிக்கையாக, டெல்லியில் தப்லீக் ஜமாத்தைச் சேர்ந்த உறுப்பினர்கள் மற்றும் அவர்களுடன் தொடர்பில் இருந்த சுமார் 25 ஆயிரம் பேரை தனிமைப்படுத்தி வைத்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
நிசாமுதீன் மர்கசில் நடந்த கூட்டத்திற்குப் பிறகு தப்லீக் ஜமாத்தினர் சிலர் சென்று தங்கிய அரியானா மாநிலத்தின் 5 கிராமங்களும் சீல் வைக்கப்பட்டு அங்குள்ள மக்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என உள்துறை அமைச்சக இணைச் செயலாளர் புண்ய சலீலா ஸ்ரீவாத்சவா தெரிவித்துள்ளார்.
கொரோனா பரவிய நிசாமுதீன் மர்கசுக்கு வந்து சென்ற 2083 வெளிநாட்டினர் கண்டறியப்பட்டு அவர்களில் 1750 பேர் தடுப்புப்பட்டியலில் வைக்கப்பட்டுள்ளதாக கூறிய அவர், இதன் மூலம் தொற்று பரவுதல் தடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.