வரும் 15 ஆம் தேதி முதல் உள்நாட்டு விமான சேவையையும், அடுத்த மாதம் ஒன்றாம் தேதியில் இருந்து சர்வதேச விமான சேவையையும் துவக்க உள்ளதாக பட்ஜெட் ஏர்லைன்சான கோ ஏர் (GoAir) அறிவித்துள்ளது.
இதற்கான முன்பதிவுகள் துவங்கி விட்டதாக அதன் செய்தித் தொடர்பாளர் மும்பையில் தெரிவித்தார். கொரோனா தொற்றை அடுத்து கடந்த 24 ஆம் தேதி நாட்டில் அனைத்து விதமான பயணியர் விமான சேவைகளும் ரத்து செய்யப்பட்டன.
ஊரடங்கு அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து விமான சேவை வரும் 14 ஆம் தேதி ரத்து செய்யப்பட்டுள்ளது. அதே சமயம் ஊரடங்கு காலம் முடிந்த பிறகு விமான சேவைகள் மீண்டும் துவங்குமா என்பது குறித்து அரசு இதுவரை எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.