கொரோனா வைரஸ் உள்ள ஒருவர் பிறர் மீது எச்சில் துப்பினால் அது கொலை முயற்சியாகக் கருதப்படும் என இமாச்சலப் பிரதேசக் காவல்துறைத் தலைமை இயக்குநர் மார்டி தெரிவித்துள்ளார்.
சிம்லாவில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கொரோனா வைரஸ் தொற்றுள்ள ஒருவர் பிறர் மீது எச்சில் துப்பினால் அவர் மீது கொலைமுயற்சி வழக்குப் பதிவுசெய்யப்படும் எனத் தெரிவித்தார்.
எச்சில் துப்பப்பட்டவர் உயிரிழந்தால் அந்த வழக்கு கொலை வழக்காக மாற்றப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார். வேண்டுமென்றே கொரோனாவைப் பரப்பும் முயற்சியைத் தடுக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.