ரிலையன்ஸ் அதிபர் முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு கடந்த இரு மாதங்களில் 28 விழுக்காடு குறைந்து 3 லட்சத்து 65 ஆயிரம் கோடி ரூபாயாக உள்ளது.
கொரோனா பரவல் எதிரொலியாகப் பங்குச்சந்தையில் கடும் வீழ்ச்சி ஏற்பட்டதால் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்கு விலையும் வீழ்ச்சியடைந்தது. இதனால் கடந்த இரண்டு மாதங்களில் முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு ஒரு லட்சத்து 44 ஆயிரம் கோடி ரூபாய் அளவு குறைந்துபோனது.
மார்ச் 31ஆம் தேதி நிலவரப்படி அவரது சொத்து மதிப்பு 3 லட்சத்து 65 ஆயிரம் கோடி ரூபாயாக இருந்தது. இதனால் உலகப் பணக்காரர்கள் வரிசையில் முகேஷ் அம்பானி 8 இடங்கள் பின்தங்கி 17ஆவது இடத்துக்குச் சென்றுள்ளார்.
இதேபோல் கவுதம் அதானி, சிவநாடார், உதய் கோட்டக் ஆகியோரின் சொத்து மதிப்பும் பெருமளவு குறைந்துள்ளது.