மும்பை தனியார் மருத்துவமனையில் செவிலியர்கள், மருத்துவர்கள் 29 பேருக்குக் கொரோனா வைரஸ் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து அப்பகுதி கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டுள்ளது.
மத்திய மும்பையில் ஒக்கார்ட் குழுமத்துக்குச் சொந்தமான மருத்துவமனையில் பணியாற்றும் செவிலியர்கள் 26பேருக்கும், மருத்துவர்கள் 3 பேருக்கும் கொரோனா பாதிப்பு இருப்பது ஆய்வில் கண்டறியப்பட்டது.
இதையடுத்து அங்குள்ள அனைவரும் மருத்துவமனையிலேயே தங்கியிருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. அந்த மருத்துவமனையைக் கட்டுப்பாட்டு மண்டலமாக மும்பை மாநகராட்சி அறிவித்துள்ளது. அதன்படி வெளியாட்கள் உள்ளே செல்லவும், உள்ளே இருப்பவர்கள் வெளியே வரவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.