கொரோனா பாதிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும், வீட்டிலேயே தனித்திருத்தலின் அவசியத்தை வலியுறுத்தும் வகையிலும் நடிகர் ரஜினிகாந்த் உள்ளிட்ட உச்ச திரை நட்சத்திரங்கள் நடிப்பில் குறும்படம் ஒன்று தயாராகியுள்ளது.
பேமிலி என பெயரிடப்பட்டுள்ள அந்த குறும்படத்தில், பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன், தமிழக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், சிரஞ்சீவி, பிரியங்கா சோப்ரா, ரன்பீர் கபூர், அலியாபட் உள்ளிட்ட ஏராளமான நட்சத்திரங்கள் பங்கெடுத்துள்ளனர்.
வீட்டில் தனித்திருத்தல், சுகாதாரம் பேணுதல், வீட்டிலிருந்து பணிபுரிதல், தனிநபர் இடைவெளியை பின்பற்றுதல் உள்ளிட்டவற்றின் அவசியத்தை வலியுறுத்தும் இந்த குறும்படத்தை பிரசூன் பாண்டே என்பவர் இயக்கியுள்ளார். இந்தக் குறும்படம் இன்று இரவு 9 மணிக்கு பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகவுள்ளது.