நாள்தோறும் இருபதாயிரம் பேருக்குக் கொரோனா பரிசோதனை மேற்கொள்வதற்காக ஆய்வக வசதிகளை அதிகரிக்க அரசு திட்டமிட்டுள்ளது.
கொரோனா தொற்று, நோயாளிகளுடன் தொடர்பில் இருந்தோர், தொடர்பில் இருந்தவர்களுடன் தொடர்புகொண்டோர் எனச் சங்கிலித் தொடராகப் பரவ வாய்ப்புள்ளது. இதனால் இந்தச் சங்கிலித் தொடரை அறுத்துக் கொரோனா பரவாமல் தடுக்கப் பெரும் எண்ணிக்கையிலானோருக்குச் சோதனை செய்ய வேண்டியுள்ளது.
இதனால் மருத்துவ ஆராய்ச்சிக் குழுவின் ஆய்வகங்களில் இப்போது நாள்தோறும் பத்தாயிரம் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும் நிலையில், அடுத்த 3 நாட்களில் அதை இருபதாயிரம் பரிசோதனைகள் அளவுக்கு மேம்படுத்த அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காக ரோச் கோபாஸ் 6800 வகையைச் சேர்ந்த 4 எந்திரங்களை வாங்க ஆர்டர் கொடுக்கப்பட்டுள்ளது.
இந்த எந்திரத்தில் ஒரு நாளைக்கு ஐயாயிரம் மாதிரிகளைப் பரிசோதனை செய்ய முடியும்.