நாடு முழுவதும் தினமும் 60 லட்சத்துக்கும் மேற்பட்ட சிலிண்டர்கள் வினியோகிக்கப்படுவதாக, பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.
எண்ணெய் நிறுவனங்களைச் சேர்ந்த 700-க்கும் மேற்பட்ட, மாவட்ட தொடர்பு அதிகாரிகளுடன் காணொலிக் காட்சி மூலம் அமைச்சர் கலந்துரையாடினார். அதில் பேசிய தர்மேந்திர பிரதான், 15 முனையங்கள், 195 பாட்லிங் நிலையங்கள் இடைவிடாமல் இயங்கி வருவதால், எல்.பி.ஜி. பொருட்கள் நாட்டு மக்களுக்கு தடையில்லாமல் கிடைப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது எனக் குறிப்பிட்டார்.
மேலும், உஜ்வாலா திட்டத்தின் கீழ் வரும் குடும்பத்தினருக்கு 3 சிலிண்டர்களுக்கான பணம் முன்கூட்டியே வங்கிக் கணக்கில் செலுத்தப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.