ஏப்ரல் 15ம் தேதிக்குப் பிறகு படிப்படியாக கட்டுப்பாடுகள் தளர்த்தப்படலாம் என்று கூறப்படுகிறது.
ஊரடங்கு காரணமாக அனைத்து தொழிற்சாலைகளும் மூடப்பட்டிருப்பதால் நாட்டின் உற்பத்தி முடங்கி, மிகப்பெரிய பொருளாதார இழப்பை சந்தித்து வருகிறது. இதனால் ஷிப்ட் நேரத்தை குறைப்பதன் மூலம் ஆட்டோ மொபைல் போன்ற தொழில்களின் உற்பத்தியை அனுமதிப்பது குறித்து மத்திய அரசு மாநில அரசுகளுடன் ஆலோசித்து வருகிறது.
பல்வேறு நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களுக்கு சம்பளம் வழங்க இந்த நடவடிக்கை உதவும் என்று கருதப்படுகிறது. தனிமைப்படுத்தப்பட்ட தொழில் கூடங்கள், பணியாளர்களுக்கு தனி பாஸ்கள், தொழிலாளர்களுக்கு தனி போக்குவரத்து வசதி, மருத்துவ காப்பீடு, தனிமனித விலகல் போன்றவற்றுடன் தொழில்துறைக்கு புத்துயிர் கொடுக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.