அமெரிக்காவுக்கு ஹைட்ராக்சிகுளோரோகுயின் மாத்திரைகளை ஏற்றுமதி செய்ய உதவக் கோரிய டிரம்பிடம், தம்மால் இயன்ற அனைத்து உதவிகளையும் செய்வதாக மோடி உறுதியளித்துள்ளார்.
கொரோனா வைரஸ் பாதித்த நோயாளிகளுக்கு மருந்தாகப் பயன்படும் ஹைட்ராக்சிகுளோரோகுயின் உட்படப் பல்வேறு மருந்துகளை வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்ய இந்தியா மார்ச் 25ஆம் தேதி தடை விதித்தது. அமெரிக்காவில் கொரோனா வைரசால் 3 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அந்நாட்டு அதிபர் டிரம்ப், இந்தியப் பிரதமர் மோடியிடம் தொலைபேசியில் தொடர்புகொண்டு ஹைட்ராக்சிகுளோரோகுயின் மாத்திரைகளை விடுவிக்க உதவுமாறு கேட்டுக்கொண்டார். இதற்குப் பதிலளித்த மோடி, தம்மால் இயன்ற அனைத்தையும் செய்வதாக டிரம்புக்கு உறுதியளித்தார்.