ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் சீக்கிய குருத்துவாராவில் புகுந்து தாக்குதல் நடத்திய தீவிரவாதிகள் உட்பட 20க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குருத்துவாராவில் புகுந்த சில தீவிரவாதிகள் அங்கிருந்து நூற்றுக்கும் மேற்பட்ட பக்தர்களை சிறைப்பிடித்தனர். பாதுகாப்பு படையினர் துப்பாக்கிச் சண்டை நடத்தி 80க்கும் மேற்பட்டோரை மீட்டனர்.
ஆனால் தீவிரவாதிகளால் 27 சீக்கியர்கள் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு ஐ.எஸ். துணை இயக்கமான ISKP பொறுப்பேற்றுக் கொண்டது. இவ்வழக்கில் முதன் முறையாக இந்தியாவுக்கு வெளியே விசாரணையில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் ஈடுபட்டிருந்தனர்.
இந்நிலையில் இதன் தலைவனான பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த பரூக்கி உள்ளிட்ட 20க்கும் மேற்பட்டோரை ஆப்கான் பாதுகாப்பு படையினர் கைது செய்துள்ளனர்.