ஏப்ரல் 15-ம் தேதியில் இருந்து விமான போக்குவரத்திற்கான டிக்கெட்டை முன்பதிவு செய்து கொள்ளலாம் என, ஏர் ஏசியா நிறுவனம் தெரிவித்துள்ளது.
கொரோனா முன்னெச்சரிக்கையாக அமல்படுத்தப்பட்டுள்ள நாடு தழுவிய ஊரடங்கு உத்தரவின் காரணமாக, 14ந் தேதி நள்ளிரவு வரை விமான சேவை முழுவதுமாக நிறுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், உள்ளூர் விமான சேவை நிறுவனங்கள் 14ம் தேதிக்கு பிறகான டிக்கெட் முன்பதிவை தொடங்க தடையில்லை என விமான போக்குவரத்துத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, முன்பதிவை தொடங்கியுள்ள ஏர் ஏசியா நிறுவனம், ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்படாமல் இருந்தால் 15ம் தேதி முதல் சேவை தொடங்கப்படும் என தெரிவித்துள்ளது.