பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அமைச்சரவைக் குழுக் கூட்டம் நாளை காணொலி காட்சி மூலம் நடைபெறுகிறது.
கொரோனா வைரஸ் நோய்த் தொற்று காரணமாக ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்ட பிறகு, நடைபெறும் முதல் அமைச்சரவைக் குழுக் கூட்டம் இதுவாகும்.
மேலும், இந்திய வரலாற்றில் காணொலி காட்சி மூலம் நடைபெறும் முதல் அமைச்சரவைக் குழுக் கூட்டம் எனவும் கூறப்படுகிறது இதைதொடர்ந்து, செவ்வாயன்று மோடி தலைமையில் மத்திய அமைச்சரவையின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது.
இதில், கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் வகையிலான நடவடிக்கைகளை, மேலும் சிறந்த முறையில் செயல்படுத்துவது குறித்து விவாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.