ஊரடங்கு காலம் முடிந்த பின்னர் படிப்படியாக ரயில் சேவைகளை தொடங்குவதற்கான நடவடிக்கைகளை ரயில்வே நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது.
ஏப்ரல் 15ஆம் தேதி ஊரடங்கு தளர்த்தப்படும் என்று எதிர்பார்ப்பு இருப்பதால், 240 ரயில்கள் தங்கள் இலக்கை நோக்கி பயணித்து முக்கிய நகரங்களில் பயணிகளை ஏற்றிச் செல்வதற்கு தயாராகி வருகின்றன.
ரயில் பெட்டிகளில் கிருமி நாசினிகள் தெளிக்கப்பட்டு பராமரிப்பு பணிகளும் நடைபெறுகின்றன. ரயில்வே டிக்கட்டுகள் முன்பதிவு ,தண்டவாள பராமரிப்பு, ரயில்வே பாதுகாப்பு ,டிக்கட் பரிசோதனை உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்தவர்கள் 15ஆம் தேதி பணிக்கு வருமாறு அழைக்கப்பட்டுள்ளனர்.
ரயில்வே வாரியம் தலைவருடன் ஆலோசனை நடத்திய மத்திய ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் வாரியத்தின் முடிவின்படி படிப்படியாக பயணிகள் ரயில் சேவைகள் தொடங்கும் என்று தெரிவித்துள்ளார்.