பிரதமர் அறிவித்துள்ள விளக்குகள் அணைப்பு நிகழ்ச்சியின் போது நாடு முழுதும் 13 ஜிகாவாட் அளவுக்கு திடீர் மின் நுகர்வுக் குறைவுக்கு வாய்ப்புள்ளதாக தேசிய மின் வினியோக மேலாண்மை அமைப்பு தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக நாடு முழுதும் உள்ள மின் உற்பத்தி அமைப்புகளுக்கு அளித்துள்ள அறிவுறுத்தலில் வட, தென் மாநிலங்கள், கிழக்கு, மேற்கு மற்றும் தென்கிழக்கு மாநிலங்களில் குறைய வாய்ப்புள்ள மின்நுகர்வின் அளவு குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வின் போது ஏற்படும் மின் அழுத்த மாறுபாடுகளை எதிர்கொள்ள நாட்டில் உள்ள அனல், நீர், எரிவாயு உள்ளிட்ட அனைத்து வகை மின் நிலையங்களும் தங்கள் கடிகார நேரத்தை ஒன்றாக அமைத்துக்கொண்டு ஒருங்கிணைந்து செயல்பட அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மாலை 6.10 மணியில் இருந்து 9.9 மணிக்கு விளக்கு அணைப்பு முடிவடைந்த பின்னும் மின் உற்பத்தியில் குறிப்பிட்ட மாறுதல்களைச் செய்து மின் அழுத்த மாறுபாடுகளை எதிர்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.