ஞாயிற்றுக்கிழமை இரவு விளக்கேற்றுமுன் சானிட்டைசரால் கைகளைக் கழுவ வேண்டாம் என இந்திய ராணுவம் கேட்டுக்கொண்டுள்ளது.
ஞாயிறு இரவு 9 மணிக்கு மின்விளக்குகளை அணைத்துவிட்டு 9 நிமிடங்கள் மெழுகுத்திரி விளக்குகளையும், அகல் விளக்குகளையும் ஏற்றி வைக்குமாறு பிரதமர் நரேந்திர மோடி கேட்டுக்கொண்டுள்ளார். இந்நிலையில் விளக்கேற்றுமுன் சானிட்டைசரால் கைகளைத் தூய்மை செய்ய வேண்டாம் என்றும், சோப்பைப் பயன்படுத்திக் கைகளைக் கழுவுமாறும் இந்திய ராணுவம் கேட்டுக்கொண்டுள்ளது.
சானிட்டைசரில் 60 விழுக்காட்டுக்கு மேல் எத்தில் ஆல்கஹால் எனப்படும் எரிசாராயம் கலந்திருப்பதால் அதில் கைகளை நனைத்தால் விளக்கேற்றும்போது தீப்பற்றும் வாய்ப்புள்ளது என்று கூறப்படுகிறது.