டயாக்னாஸ்டிக் கிட்ஸ் (diagnostic kits) எனப்படும் நோயறி சோதனை உபகரணங்கள் ஏற்றுமதிக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது.
நோயறி சோதனைகளில் பயன்படும் துணைக் கருவிகள், பொருட்கள், வேதிக் கலவைகள் உள்ளிட்டவற்றை ஏற்றுமதி செய்வதற்கான தடை உடனடியாக அமலுக்கு வருவதாக வெளிநாட்டு வர்த்தகத்திற்கான தலைமை இயக்ககம் தெரிவித்துள்ளது.
இதுவரை, நோயறி சோதனை தொகுப்புகள் தங்கு தடையின்றி ஏற்றுமதி செய்யப்பட்டு வந்த நிலையில் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே ஏற்றுமதிக்கு தயாராக இருந்த நோயறி சோதனை உபகரணங்களை அனுப்ப வேண்டுமானால் வெளிநாட்டு வர்த்தகத்திற்கான தலைமை இயக்ககத்தின் அனுமதியைப் பெறவேண்டும்.