கொள்முதல் செய்யப்படும் உடல்காப்புக் கவசங்கள், முகக்கவசங்கள் வென்டிலேட்டர்கள் விரைவில் மாநிலங்களுக்கு வந்து சேரும் என மத்திய அமைச்சர் ஹர்சவர்த்தன் தெரிவித்துள்ளார்.
டெல்லி லோக்நாயக் ஜெயப்பிரகாஷ் நாராயண் மருத்துவமனையில் கொரோனா சிகிச்சைப் பிரிவை அமைச்சர் ஹர்சவர்த்தன் பார்வையிட்டார். கொரோனா நோயாளிகளுக்கு அளிக்கப்பட்டுவரும் சிகிச்சை, பணியாளர்களுக்கு நோய் தொற்றாமல் தடுக்கச் செய்யப்பட்ட ஏற்பாடுகள் ஆகியவை குறித்துக் கேட்டறிந்தார். உடல்காப்புக் கவசம், முகக்கவசம், வென்டிலேட்டர்கள் ஆகியவற்றைக் கொள்முதல் செய்ய ஆணைகள் வழங்கப்பட்டுள்ளதாகவும், அவை விரைவில் மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.