உலக கோடீஸ்வரர்களில் ஒருவரும் சீன தொழிலதிபருமான ஜாக் மா, இலவசமாக வழங்கியுள்ள கொரோனா பரிசோதனை கருவிகள் இந்தியா வந்து சேர்ந்துள்ளதாக சீனத்தூதர் சன் வீடோங் தெரிவித்துள்ளார்.
கொரோனாவுக்கு எதிராக போராடி வரும் இந்தியா உள்பட 7 நாடுகளுக்கு 17 லட்சம் முகக்கவசங்கள், ஒரு லட்சத்து 65 ஆயிரம் கொரோனா பரிசோதனை கருவிகள், வென்டிலேட்டர்கள் உள்ளிட்டவற்றை நன்கொடையாக வழங்க உள்ளதாக ஜாக் மா அறக்கட்டளை மற்றும் அலிபாபா அறக்கட்டளை அறிவித்திருந்தது. அதன்படி மருத்துவ உபகரணங்களின் 3வது தொகுப்பு டெல்லி வந்தடைந்துள்ளதாக இந்தியாவுக்கான சீனத்தூதர் சன் வீடோங் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.