எல்லா மின்விளக்குகளையும் ஒரே நேரத்தில் அணைப்பதால் மின்தொகுப்பு பாதிக்கப்படாது என மத்திய மின்துறை அமைச்சர் ஆர்.கே.சிங் தெரிவித்துள்ளார்.
நாளிதழுக்குப் பேட்டியளித்த அமைச்சர், நாடு முழுவதும் மின் விளக்குகளை அணைப்பதால் 15 ஜிகாவாட் மின்தேவை குறையும் எனவும், இது ஒட்டுமொத்தத் தேவையில் 4 விழுக்காட்டுக்கும் குறைவுதான் எனத் தெரிவித்தார்.
புதுப்பிக்கவல்ல எரியாற்றல், நீர்மின் நிலையங்கள், அனல்மின் நிலையங்களில் மின்னுற்பத்தியைக் குறைக்கவும், அதிகரிக்கவும் முடியும் என்பதால் மின்தொகுப்பில் பாதிப்பு ஏற்பட வாய்ப்பில்லை எனவும் அமைச்சர் தெரிவித்தார்.
விளக்குகள் அணைக்கப்படும் நேரத்தில் மின்னுற்பத்தி, மின் வழங்கல் பாதிக்கப்படாமல் இருக்க நடவடிக்கை எடுத்துள்ளதாகத் தேசிய அனல்மின்கழகம் தெரிவித்துள்ளது. ஊரடங்கால் மின்தேவையில் 25 விழுக்காடு குறைந்துள்ள நிலையிலும் மின்தொகுப்பு சீராக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.