மகாராஷ்டிரா மாநிலம் சதாரா மாவட்டத்தில் ஊரடங்கு காரணமாக சந்தைகளுக்கு ஸ்ட்ராபெர்ரி பழங்களை (strawberries) விற்பனைக்கு கொண்டு செல்ல முடியாத நிலை ஏற்பட்டிருப்பதால், அவற்றை பசுக்களுக்கு விவசாயி ஒருவர் தீவனமாக கொடுத்த சம்பவம் நடைபெற்றுள்ளது.
சதாரா மாவட்டத்தை சேர்ந்த அனில் சலுன்கே (Anil Salunkhe) என்ற விவசாயி, தனது 2 ஏக்கர் விவசாய நிலத்தில் ஸ்ட்ராபெர்ரி பழச்செடிகளை பயிரிட்டிருந்தார்.
ஸ்ட்ராபெர்ரி நன்கு பழமாகி விற்பனைக்கு தயாரான நிலையில், ஊரடங்கால் வாகன போக்குவரத்து முடங்கி, அவற்றை சந்தைகளுக்கு கொண்டு செல்ல முடியாத நிலை நேரிட்டுள்ளது. இதனால் ஸ்ட்ராபெர்ரி பழங்கள் வீணாகும் நிலை ஏற்பட்டதால் பசுக்களுக்கு தீவனமாக வைத்துள்ளார்.