இந்தியாவில் கொரோனாவுக்கு பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2 ஆயிரத்து 804 ஆக உயர்ந்துள்ளது. உயிரிழப்பு 72 ஐ எட்டி உள்ளது. நாடு முழுவதும் 162 பேர், குணமடைந்துள்ளனர்.
நாடு முழுவதும் கொரோனாவின் பாதிப்பு, நாளுக்கு நாள் அதிகரித்து, ஒவ்வொரு நாளும் திக் ... திக் ... நிமிடங்களாக கழியும் சூழல் உருவாகி உள்ளது.
கொரோனாவுக்கு பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2 ஆயிரத்து 804 ஆக உயர்ந்துள்ளது.பலி எண்ணிக்கை 72 ஆக உயர்ந்துள்ளது.
அதிகபட்சமாக மஹாராஷ்டிராவில் 490 பேர் பாதிக்கப்பட, 411 பேருடன் தமிழகம் இந்த பட்டியலில் 2 - வது இடம் வகிக்கிறது. மஹாராஷ்டிராவில் உயிரிழப்பு 16 ஆக உள்ளது. கேரளாவில் கொரோனாவுக்கு பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 295 ஐ எட்டி உள்ளது.
டெல்லியில் - 219 பேரும், உத்தரபிரதேசத்தில் 172 பேரும் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
ராஜஸ்தானில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 167 ஆகவும், தெலங்கானாவில் 158 ஆகவும் ஆந்திராவில் 132 ஆகவும் உள்ளது.
கர்நாடகாவில், 124 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
மத்திய பிரதேசத்தில் 104 பேர் பாதிக்கப்பட, உயிரிழப்பு 6 ஆக அதிகரித்தது.ச்
மத்திய பிரதேசதில் 95 பேரும், ஜம்மு - காஷ்மீரில் 75 பேரும், மேற்கு வங்கத்தில் 63 பேரும்,ஹரியானாவில் 49 பேரும் ,பஞ்சாப்பில் 48 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
பீஹாரில் 29 பேர் மற்றும் சண்டிகரில் 18 பேரும், பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள்.